எமது நோக்கம் & பயணம்
பத்து ரூபாய் இயக்கம் என்பது சாமானிய மக்களுக்கும் நீதி மற்றும் அடிப்படை உரிமைகள் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமையை (RTI) முழுமையாகப் பயன்படுத்தி, வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்குவது.
சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் சட்டம் மற்றும் நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் உரிமைகளுக்காக போராடும் தளத்தை அமைத்துக் கொடுப்பது.
எங்கள் செயல்பாடு
இலவச சட்ட ஆலோசனைகள், ஆர்டிஐ (RTI) விழிப்புணர்வு முகாம்கள், பொதுநல வழக்குகள் மற்றும் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசு அலுவலகங்களில் நடக்கும் குறைகளை சரிசெய்தல்.
டாக்டர். நல்வினை விஸ்வராஜ் M.A.,B.L.,
"வாழும் அம்பேத்கார்" – சட்ட வித்தகர் வழக்கறிஞர்
அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கவும், ஏழை எளிய மக்களின் சட்டப் போராட்டங்களுக்கு அரணாக நிற்கவும் "பத்து ரூபாய் இயக்கம்" இவரால் தொடங்கப்பட்டது.
சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல, அது ஒவ்வொரு சாமானியனின் ஆயுதம் என்பதை நம்புகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) ஒரு பத்து ரூபாய் செலவில் எவ்வாறு வலிமையான ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதை மக்களுக்கு பயிற்றுவித்து வருகிறார்.
ஆயிரக்கணக்கான பொதுநல தீர்வுகளையும், சமூக நலன் சார்ந்த போராட்டங்களையும் முன்னின்று நடத்தி வரும் இவரின் பயணம் சமத்துவமான ஒரு சமூகத்தை கட்டமைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது.